Wednesday 1 June 2011

செய்திகள் 01/06



பூனைக்கு மணி கட்டுவது யார்?

யுத்தகுற்றங்கள் தொடர்பில் சுதந்திரமானதொரு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது சர்வ வல்லமை கொண்ட நாடுகளின் பொறுப்பு என ஐ.நா செயலாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளதாக அவரது பேச்சாளர் மார்டீன் நெசர்க்கி தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஐ.நா சபையின் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தொடர்பில் ஏற்ப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். 
மேலும்இ சர்வதேச விசாரணை ஒன்றினை மேற்கொள்ள ஸ்ரீலங்கா அரசோ அல்லது அரசு சார்ந்த பல அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்போ உடன்படும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நம்புவதாக மார்டீன் நெசர்க்கி தெரிவித்துள்ளார். 
புதிதாக இலங்கை யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் உரிமை மீறல் தொடர்பான காணொளி தொடர்பில் கேள்வி எழுப்பிய போது அதுவும் சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதனை கோடிட்டு காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார;.
***************
உண்மையை இருட்டடிப்புச் செய்யும் ஊடகங்கள்!
கொழும்பில் நடைபெறும் போர்க்கருத்தரங்கில் அமெரிக்க படைத்துறை நிபுணர் டேவிட் கில்குலேன் வெளியிட்ட கருத்துக்களை ஸ்ரீலங்கா ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துள்ளன
நேற்று கொழும்பில் ஆரம்பமான சிறிலங்கா இராணுவத்தின் போர் அனுபவக் கருத்தரங்கில் உலகின் முன்னணி தீவிரவாத முறியடிப்பு நிபுணரும்இ ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகளின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ராயசின் சிறப்பு ஆலோசகருமான- அவுஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் லெப்.கேணலான டேவிட் கில்குலேன் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
அவர் நேற்று தனது உரையில் போர்க்குற்றங்களை ஒருபோதும் மூடி மறைத்து விட முடியாது என்று கூறியுள்ளதாக ஏஎவ்பி செய்தியாளர் அமால் ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்களின் வாழ்க்கை நிலையை சிறிலங்கா அரசாங்கம் உயர்த்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
மீண்டும் ஒரு மோதல் நிலை உருவாவதை தவிர்க்க வேண்டுமானால்இ முடிவான மாற்றங்களைச் செய்வது அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனினும்இ ஸ்ரீலங்கா ஊடகங்கள் இவரது இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தாமல் இருட்டடிப்புச் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
*****************
இனப்படுகொலையின் சாட்சி
சனல்-4 தொலைக்காட்சி மூலம் பெறப்பட்ட காணொலிப் பதிவு குறித்து நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான ஐ.நாவின் அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் சமர்ப்பித்த அறிக்கை பக்கச்சார்பானது என்று கூறி ஸ்ரீலங்கா அரசாங்கம் அதை நிராகரித்துள்ளது. 
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சனல்- 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொலிப் பதிவு உண்மையானதே என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும்இ அந்த இடத்தில் போர்க்குற்றங்கள் நடந்திருப்பதாகவும் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் தனது அறிக்கையில் கூறியிருந்தார். 
இந்த அறிக்கை குறித்து நேற்று ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கருத்து வெளியிட்ட ஹெய்ன்ஸ்இ இந்தக் காணொலிப்பதிவு பற்றிய தனது விசாரணைகளின் மூலம் ஸ்ரீலங்காவில் மோசமான போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்ய முடிவதாகத் தெரிவித்தார். 
எனவே கிடைக்கின்ற அனைத்து சாட்சியங்களையும் அனைத்துலக குழு ஒன்றின் மூலம் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 
இதற்குப் பதிலளித்த ஸ்ரீலங்காவின் சட்டமாஅதிபர் மொகான் பீரிஸ்இ இந்த அறிக்கை பக்கச்சார்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி அதை நிராகரித்தார். 
நீதிக்குப் புறம்பான படுகொலைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளராக முன்னர் பணியாற்றிய பிலிப் அஸ்ரன் இந்தக் காணொலிப் பதிவை யாரிடம் ஆய்வு செய்தாரோ அவர்களிடமே ஹெய்ன்சும் அறிக்கையைப் பெற்றுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
****************
இனப்படுகொலை சாட்சியங்களின் ஆவணத் தொகுப்பு
இலங்கைப் போர்க்குற்ற ஆவணங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சனல் 4 ஊடகம் அவ் ஆவணத் தொகுப்பினை திரைப்படமாக்கி எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது. 
ஒரு மணித்தியாலத்தை அடக்கிய இப்போர்க்குற்ற ஆவணத்தொகுப்பினை எதிர்வரும் 3ம் திகதி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது. 
சனல்4 ஊடகம் இதனை எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடும் என அறிவித்துள்ளது. 
இதுவரையில் வெளியிடப்படாத போர்க்குற்ற ஆவணங்களும் இதில் அடங்குவதாகவும்இ போரினால் பாதிப்புற்றோரின் வாக்குமூலங்கள்இ நேரடிச்சாட்சியங்கள் ஆகியனவும் இதில் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளது. 
இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றமைக்கான ஆதாரமாக அமைந்த சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் அனைத்தும் உண்மையானவை என்று நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் நேற்றைய கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். 
இந்த வீடியோ ஆதாரத்தை போலியானது என்று ஸ்ரீலங்கா அரசு மறுப்பு வெளியிட்டு வருகின்ற போதிலும்இ அவை உண்மையானவை என்றும் ஸ்ரீலங்கா அரசு பொய் கூறுகின்றது என்பதும் ஐ.நா முதல் யாவரும் அறிந்ததே. 
***************
இனப்படுகொலையை தடுக்க ஆதரவு கோரும் தமிழீழ நா.க.அரசு
ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசின் பரப்புரைகளை முறியடிக்கஇ பங்கெடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரிதிநிதிகள்இ போர்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னிறுத்தி ஐ.நா உயர் அதிகாரிகள் - நாடுகளின் தூதுவர்கள் - மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள் என பல்வேதரப்பட்டவர்களின் ஆதரவை பெற முயற்சிக்கின்றனர்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை மையப்படுத்திஇ உலக நாடுகள் - மனித உரிமை அமைப்புக்கள் - அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியனஇ தங்களது கருத்துக்களை கூட்டத் தொடரில் முன்வைத்து வருகின்றன. 
இந்நிலையில்இ கூட்டத் தொடர் இடம்பெறும் காலப்பகுதி முழுவதும்இ நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்சியாக பங்கெடுக்கவுள்ளதாக கூட்டத்தொடரில் பங்கெடுத்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாவுக்கான அரசியல் வெளிவிகார அமைச்சுப் பிரதிநிதி முருகையா சுகிந்தன் தெரவித்துள்ளார். 
இதேவேளைஇ நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியூரைஞர் குழுப் பிரதிநிதியான கலாநிதி கரன் பார்க்கர் அம்மையார் அவர்களும்இ கூட்டத் தொடரில் பங்கெடுத்திருப்பதாகஇ அவர் மேலும் தெரிவித்தார். 
தமிழ்மக்கள் மீது சிறிலங்கா இழைத்த போர்குற்றங்கள் - மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு ஒரு சர்வதேச விசாரணையை முன்னிறுத்தி ஐ.நா உயர் அதிகாரிகள் - நாடுகளின் தூதுவர்கள் - மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள் என பல்வேதரப்பட்டவர்களின் ஆதரவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் திரட்டவுள்ளனர். 
ஜெனீவாவில் உள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் மே-30 முதல் யூன்-17 வரை இடம்பெறுகின்றது.
*****************
நீதிக்கு துணை நிற்க கோரும் பிரித்தானிய தமிழர் பேரவை
தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க துணை நிற்பேன் எனஇ ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் போர் மேர்பி (Paul Murphy)உறுதியளித்துள்ளார்.
பிரித்தானிய தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர்கள் டப்ளினிற்கான ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் போல் மேர்பியை நேற்று பெல்ஜியத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியபோது அவர் இந்த வாக்குறுதியை வழங்கியிருக்கின்றார். 
ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் மனித உரிமை விடங்கள் பற்றி பேசப்பட்டன.
தமிழ் மக்களின் விடயம் அனைத்துலகின் பார்வைக்கு வருவதற்கு நீண்ட காலம் எடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டிய போல் மேர்பிஇ தற்பொழுது முன்னிலைக்கு வந்துள்ள தமிழ் மக்களின் விடயத்தை வைத்து அவர்களுக்கு நீதி கிடைக்க அனைவரும் கடுமையாகப் பாடுபட வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பு பற்றி கருத்துரைத்த பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் சண் சுதாஇ தமிழ் மக்கள் மீது மனித குல சட்டத்திற்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க எந்தெந்த வழிகளைப் பயன்படுத்த முடியுமோ அவற்றைப் பயன்படுத்துவோம் எனவும்இ நேற்றைய சந்திப்பு நட்பு ரீதியாகவும்இ சுமுகமாகவும் இடம்பெற்றிருந்தது எனத் தெரிவித்தார்.
இன்று பிரசல்சில் நடைபெறவுள்ள தமிழ் மக்கள் பற்றிய கருத்தரங்கில் போல் மேர்பி பிரதான பேச்சாளராகக் கலந்துகொள்ள இருக்கின்றார். 
ஐரோப்பிய ஒருங்கிணைந்த இடதுசாரிகள் மற்றும் நோர்டிக் பச்சைக்கட்சி இடதுசாரிகள்  (European United Left-Nordic Green Left) vd;w 
என்ற அமைப்பு இன்றைய கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. 
இலங்கைஇ இந்தியாஇ பிரித்தானியாஇ பிரான்ஸ்இ ஜேர்மனிஇ மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் இருந்து பலர் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர். 
அத்துடன்இ ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்ள இருப்பதாகஇ இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களிற்காகக் குரல்கொடுத்துவரும் கூட்டிணைந்த தமிழ் அமைப்பு தெரிவித்துள்ளது.
********************