Thursday 26 May 2011

செய்திகள் 26/05


தமிழரை ஏமாற்ற மீண்டும் சர்வதேச சதி!

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பாக புதிய விசாரணைகளை நடத்த ஐந்து நீதிபதிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் பிரியந்த பெரேரா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஐந்து நீதிபதிகளைக் கொண்ட இந்தக் குழுவில் மூவர் சிங்களவர்களாகவும், ஏனைய இருவரில் ஒருவர் தமிழராகவும் மற்றையவர் முஸ்லிமாகவும் இருப்பார்.
உயர்நீதிமன்றத்தின் அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகளே இந்தக் குழுவுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
இந்தக் குழுவின் நடவடிக்கைள் அடுத்த மாதம் ஆரம்பமாகும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையின் கீழ் இந்தக்குழு சுதந்திரமான முறையில் செயற்படும் எனவும் வழமை போன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறிப்பாக இந்தக்குழு இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தும்.
இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகள் தொடர்பான ஏராளமாக மனிதஉரிமை மீறல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பாக விரைவில் தீர்வு காண முயற்சிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
.நாவின் அனுசரணையுடன் கடந்தவாரம் ஜெனிவாவில் நடைபெற்ற ஆசிய பசுபிக் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் பங்கு பற்றியிருந்ததாகவும்
அங்கு, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சர்வதேச சமூகத்தை ஏமாற்றி ஐநா நிபுணர் குழு அறிக்கையை கிடப்பில் போட மேற்கொள்ளப்படும் மற்றுமொரு முயற்சியே இதுவென அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
**************
சீன தளபதி ஸ்ரீலங்கா விஜளம்
சீன இராணுவத்தின் பிரதித் தளபதி ஜெனரல் மா சியாவோதியன் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அடுத்தமாதம் முதல்வாரம் அவர் சிறிலங்கா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் சிறிலங்கா வரும் வழியில் புதுடெல்லியில் ஒருநாள் தங்கியிருந்து இந்திய பாதுகாப்புத் துறையின் உயர்மட்டங்களுடன் பேச்சு நடத்த விருப்பம் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்தியா அதனை நிராகரித்துள்ளது.
மே 30 நாள் தொடக்கம் ஜுன் 2ம் நாள் வரை இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு இறுக்கமான நிகழ்ச்சி நிரல் இருப்பதால், சீன இராணுவ ஜெனரலை சந்திக்க முடியாது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் .கே. அந்தோனி கூறியுள்ளார்.
எனினும் சீன ஜெனரல் சிறிலங்காவுக்கான பயணம் மேற்கொள்வது தொடர்பாக சீனா அதிகாரிகளோ, சிறிலங்கா அதிகாரிகளோ இன்னமும் தகவல் எதையும் வெளியிடவில்லை.
சிறிலங்காவில் நடைபெறவுள்ள போர்க்கருத்தரங்கில் சீன ஜெனரல் பங்குபற்றுவாரா அல்லது அதற்குப் பின்னர் சிறிலங்கா செல்லவுள்ளாரா என்ற தெளிவான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
*****************

இன அழிப்பாளர்களோடு கைகோர்க்கும் வக்கற்ற ஐநா!
.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான திணைக்கள அதிகாரிகளை சிறிலங்காவின் .நாவுக்கான தூதுவர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இந்தவாரம் சந்தித்துப் பேசியுள்ளார்.
இதன்போது. .நா அமைதிப்படைக்கு அனுப்பப்படும் படையினர் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களாக இல்லாதிருப்பதை உறுதி செய்யும் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
.நா அமைதிப்படையின் கௌரவத்தை உறுதி செய்யும் வகையிலேயே .நா அமைதிப்படைக்கு படையினரை அனுப்பும் உறுப்பு நாடுகளுடன் இத்தகைய உடன்பாட்டை .நா செய்து வருகிறது.
இதன்படி, எதிர்காலத்தில் எத்தகையவர்களை சிறிலங்கா அரசாங்கம் .நா அமைதிப்படையில் பணியாற்ற அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனைகளை .நா முன்வைத்துள்ளதாக தெரிகிறது.
இந்த உடன்பாட்டில் சிறிலங்காவின் சார்பில் .நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன கையெழுத்திட்டதாகவும், அப்போது .நாவுக்கான தூதுவர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா முன்னிலை வகித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் அவரது முன்னிலையில் மனிதஉரிமைகளுடன் தொடர்புடைய உடன்பாடு ஒன்றை .நா செய்து கொண்டுள்ளது முரண்பாடானது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ள .நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி, இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது சிறிலங்கா என்ற ஒரு உறுப்பு நாட்டுடனேயே தவிர, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா என்ற தனிநபருடன் அல்ல என்று கூறியுள்ளார்.
***************

தடுமாறும் குற்றவாளிகள்!
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்துவிடுமாறு கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தததை தான் கேள்விப்பட்டிருந்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையில் நேற்று சாட்சியமளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்து விடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாக யுத்தத்தின் இறுதிக் கட்டம் வரை இராணுவத்தினருடன் தங்கியிருந்த ஊடகவியலாளர்கள் இருவர் மூலமாகவே தான் கேள்விப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதனையே தான் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸ் இடமும் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
ஆனால் அவர் ஒருபோதும் தன்னைப் பேட்டி கண்டதில்லை எனவும், சண்டே லீடர் சார்பில் வேறொரு ஊடகவியலாளரே தன்னைப் பேட்டி கண்டிருந்தார் எனவும் சுட்டிக்காட்டினார்.
அச்சந்தர்ப்பத்தில் பிரட்ரிக்காவும் அங்கு பிரசன்னமாகி இருந்தார்.
அத்துடன் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் யாரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்ததாக தான் அறியவுமில்லை என தெரிவித்தார்.
இராணுவத் தளபதி என்ற வகையில் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள தனக்கு கால அவகாசம் வழங்கப்படவுமில்லை என்றும் சரத் பொன்சேகா தனது சாட்சியத்தின்போது மேலும் தெரிவித்துள்ளார்.
***********
இராணுவ மயமாகும் மயான தேசம்
பாடசாலை அதிபர்களின் செயற்திறனை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கும் எதிர்வரும் நாட்களில் இராணுவப் பயிற்சியினை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
கொழும்பு இசிபத்தனை தேசிய பாடசாலையில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வியமைச்சின் செயலளார் எச்.எம். குணசேகர இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
பாடசாலை அதிபர்களின் செயற்திறன் அதிகரிக்கப்பட்டால் தான் பாடசாலைகளின் கல்வித்தரம் அதிகரிக்கும்.
அதனை நோக்காகக் கொண்டு பாடசாலை அதிபர்களுக்கும் மூன்று மாத இராணுவப் பயிற்சியொன்று மிக விரைவில் வழங்கப்படவுள்ளது.
பாடசாலை அதிபர் மட்டுமன்றி பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளும் கூட செயற்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
பாடசாலை மதிலால் ஏறிப்பாய வேண்டிய சந்தர்ப்பமொன்றை எதிர்கொண்டால் அதனையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
மாணவர்கள் அங்கும் இங்குமாக ஒளித்துத் தப்பியோட முனையும் போது அவர்களை விரட்டிப் பிடிக்கக் கூடியவர்களாக, அதற்கான உடற்தகுதி கொண்டவர்களாக அதிபரும் ஆசிரியர்களும் இருக்க வேண்டும்.
அதற்கென முதற்கட்டமாக ஆயிரம் பாடசாலைகளின் அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இராணுவத்தினரின் மேற்பார்வையின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
அவர்களுக்கான பயிற்சிகள் ரன்டம்பை இராணுவ முகாமில் வைத்து வழங்கப்படும் என்றும் கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவை இராணுவ மயப்படுத்தும் முயற்சியின் மற்றுமொரு கட்டம் இதுவென அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
*************
இனவழிப்பை நியாயப்படுத்த உசாரூட்டும் உலக பிரதிநிதிகள்
வெளிநாடுகளில் கடமையாற்றி வரும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமென பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தின் சில தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிழையான பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக பதவியேற்றுக் கொண்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் முன்னிலையில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் மிலேச்சத்தனமானவர்கள் என ஒரு தரப்பினர் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசமான பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு இராஜதந்திரிகளின் பங்களிப்பு முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
பலம்பொருந்திய நாடுகள் சிறிய நாடுகள் மீது ஆதிக்கத்தை செலுத்த முற்படுவதாகவும், இதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
*****************