Wednesday 20 April 2011

செய்திகள் 20/04


பொது மக்களின் இறப்பை ஏற்றுக் கொள்ளும் ஐநா என்ன செய்யப் போகின்றது?

இலங்கையின் இறுதிக்கட்டப் யுத்தத்தின் போது பொதுமக்கள் நாற்பதாயிரம் பேர் வரையிலானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற மதிப்பீடுகளை தற்போதைக்கு புறந்தள்ள முடியாது என ஊடகங்களில் கசிந்துள்ள .நா. நிபுணர் குழு அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் அவ்வறிக்கையில் .நா. நிபுணர் குழுவின் முழுமையான அறிக்கை இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படாதுள்ளது.
இந்நிலையில் அந்த அறிக்கையின் பாகங்கள் சில கசிந்துள்ளதாகக் கூறி இலங்கையிலுள்ள நாளிதழ்கள்-குறிப்பாக அரச சார்பு செய்தி நாளிதழ்கள் கட்டம் கட்டமாக அவ்வறிக்கையின் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் யுத்தத்தின்போது, யுத்தகுற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று கூறும் அளவுக்கு சர்வதேச சட்டங்களை மீறும் வகையிலான பெரும் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாக .நா. நிபுணர் குழு கண்டறிந்துள்ளது என இலங்கையில் அண்மையில் கசிந்த .நா. குழுவின் அறிக்கையுடைய சுருக்கங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
அதற்கு ஸ்ரீலங்கா அரச தரப்பிலிருந்தும், அங்குள்ள பெரும்பான்மைக் கட்சிகளிடமிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு .நா. நிபுணர் குழு அறிக்கையை வரவேற்பதாக தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, இவ்வாறு வெளியாகியுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்கள் சரியானவை தான் என்பதை .நா. அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையிலிருந்த ஐநா அலுவலக அதிகாரிகள் கொடுத்த புள்ளிவிபரங்களையும் நிபுணர் குழு கருத்தில் எடுத்துள்ளது.
.நா. இதுவரை வெளியிடாது வைத்திருந்த புள்ளிவிபரங்களின் படி, ஓகஸ்ட் 2008 முதல் மே 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பொதுமக்கள் 7,721 கொல்லப்பட்டும் 18,479 பேர் காயமடைந்தும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் 2009 பெப்ரவரியில் .நா. அதிகாரிகள் உயிர்ச் சேதங்கள் பற்றிய கணக்கெடுப்புகளை மேற்கொள்ள முயற்சித்த போதிலும் அதன் பின்னர் போர் வலய மக்களை சென்றடைவதற்காக வழிகள் இல்லாமையால் அந்த முயற்சிகளும் கைகூடவில்லை எனவும் .நா. தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் இழப்புகளின் புள்ளி விபரங்கள் பற்றி .நா. எடுத்துக்கூறிய போதெல்லாம் அந்த எண்ணிக்கைகளை கட்டுக்கதைகள் என ஸ்ரீலங்கா அரசு புறந்தள்ளியது என்பதையும் .நா. நிபுணர் குழு தனது அறிக்கையில் பொதுமக்களின் இழப்புகள் பற்றிய பாகத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*******************
கால அவகாசம் என்னவானது?

.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் வழங்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் பிரதியே கொழும்பு நாளிதழுக்கு வழங்கப்பட்டதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நிபுணர்கள் குழு தமது 196 பக்க அறிக்கையை .நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கடந்த 12ம் நாள் கையளித்த பின்னர், அதன் பிரதி ஒன்று .நாவுக்கான சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதியும், இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவருமான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்டது.
.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த அறிக்கையை 24 மணி நேரத்தில் வெளியிடவுள்ளதாக அப்போது .நா தரப்பில் அவரிடம் கூறப்பட்டது.
அதற்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சிறிலங்கா அரசுக்கு கொஞ்சம் காலஅவகாசம் தேவைப்படுவதாக கேட்டிருந்தார்.
அதற்கு .நா 36 மணிநேரம் காலஅவசகாசம் தருவதாகக் கூறியிருந்தது.
ஆனால் 36 மணிநேர காலஅவகாசம் முடிவடைந்த போதும் சிறிலங்கா அரசின் பதில் .நாவுக்குக் கிடைக்கவில்லை.
அந்த 36 மணிநேரத்துக்குள், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அறிக்கையின் பிரதி ஸ்கான் செய்யப்பட்டு, சிறிலங்கா அதிபருடன் இணங்கிப் போகும் ஐலன்ட் நாளிதழுக்கு வழங்கப்பட்டது.
ஐலன்ட் நாளிதழ் இந்த அறிக்கையை வெளியிட்டு 5 நாட்களாகியும், பான் கீ மூன் இந்த அறிக்கையை இன்னமும் வெளியிடவில்லை.
இந்த அறிக்கைக்கு எதிராக மே 1ம் நாள் பாரிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதன் மூலம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பதிலளித்துள்ளார்.
.நா பொதுச்செயலர் இதற்கு என்ன செய்யப் போகிறார்? போரை நிறுத்துமாறு அவர் ஏன் கோரவில்லை? நம்பியாரை ஏன் தனது தூதுவராக அனுப்பி வைத்தார்? என இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய விஜய் நம்பியாரை அவர் தன்னுடன் தொடர்ந்து வைத்திருப்பது ஏன்?
பாதுகாப்புச் சபையில் சிறிலங்கா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதை ரஸ்யா தடுத்துள்ள நிலையில், ரஸ்யாவுக்கு மேற்கொள்ளும் பயணத்தில் போது பான் கீ மூன் எதைப் பற்றிப் பேசப் போகிறார்? என்றெல்லாம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
*********************

பதவிக்காக நீதி பலியாகுமா?

சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர் மீறல்கள் தொடர்பாக .நா நிபுணர் குழுவினால் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் எடுக்கப்படக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் பான் கீ மூனின் இரண்டாவது பதவிக் காலத்திற்காக பலிக்கடா ஆக்கப்படுமா என nநெச ஊவைல Pசநளள கேள்வி எழுப்பியுள்ளது.  
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினால் கையளிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் போர் மீறல்கள் தொடர்பான அறிக்கையும், சிறிலங்கா சார்ந்த விவகாரமும் பாதுகாப்பு அவையின் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் விவாதப் பொருளாக .நா வெளியுறவு அரசியல் அமைச்சகத் தலைவர் டுலnn Pயளஉழந அவர்களால் நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்டது.  
2009ஆம் ஆண்டு பெரும் இரத்தக் களரியை ஏற்படுத்திய இறுதிக் கட்டப் போர் பற்றிய விவாதங்களை ரஸ்யா எதிர்த்து வந்துள்ளது.
நேற்று நடைபெற்ற விவாதத்திலும் ரஸ்யா எதிர்ப்பினைத் தெரிவித்திருந்து.  
ரஸ்யாவின் எதிர்ப்புகளையும் தாண்டி, ஐஎழசல ஊழயளவ விவகாரத்தில் .நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நடவடிக்கை எடுத்தமை  குறிப்பாக இராணுவ ரீதியிலான நடவடிக்கையினை எடுத்தமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும் என இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.  
இப்பொழுது பான் கீ மூன் ரஸ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரஸ்யாவைச் சாந்தப்படுத்தவும், .நா பொதுச்செயலாளராக இரண்டாவது முறை தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பை தக்கவைப்பதுமே அவரின் பயணத்தின் நோக்கமாக கருதப்படுகின்றது.  
பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்புரிமை கொண்டுள்ள நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தின் மூலம் பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலத்திற்கான தெரிவைத் தடுக்க முடியும்.  
நிபுணர் குழுவின் அறிக்கை கசிய விடப்படுவதற்கு முன்னரே இவ்விவகாரம் பாதுகாப்பு அவையின் நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்பட்டிருந்தது.
கொழும்பிலிருந்து வெளிவரும் ஐலண்ட் நாளேட்டில் வெளிவந்த அறிக்கையின் சுருக்கம், சிறிலங்கா அரசாங்கத்தினால் கசிய விடப்பட்டதாகவே நம்பப்படுகின்றது.  
ஆனால் அறிக்கையின் உள்ளடக்கம் கசிந்த பின்னர், பாதுகாப்பு அவைக்குள் முக்கிய பேசுபொருளாக இந்த விவகாரம் ஆகியுள்ளதாக பல்வேறு தரப்பட்ட தகவல்களின் மூலம் அறியவந்துள்ளதாக nநெச ஊவைல Pசநளள தெரிவித்துள்ளது.  
சிறிலங்கா அரசாங்கமே அறிக்கையினைக் கசியவிட்டதாக பாதுபாப்பு அவை மட்டத்தில் நம்பப்படுகின்றது. ஆனபோதும் முழு அறிக்கையினையும் விவாதிப்பதை விடுத்து, வெளிவிடப்பட்டுள்ள அறிக்கையின் சில பகுதிகளை மட்டும் விவாதிப்பது பொருத்தமற்றது எனப் பாதுகாப்பு அவையின் பல்வேறு உறுப்பு நாடுகள் கருதுகின்றன.  
இந்நிலையிலேயே பான் கி மூனின் ரஷ்ய பயணமும் சிறிலங்கா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் உதவியை நாட உள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளும் இவ்விடயம் .நா செயலாளர் நாயகத்தின் இரண்டாவது பதவிக்காலத்திற்காக பலியாகிவிடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
***************
பத்து இலட்சம் கையொப்பம்!

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும், படையினருக்கும் எதிராக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிககை வெளியிட்டுள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகவும் தனியார் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தலைமையில் இந்த கையொப்பம் திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பு பெஸ்டியன் வீதியில் நாளை பத்து மணியளவில் இந்த எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
****************


கொழும்பு அலுவலகத்திற்கு பாதுகாப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் காரியாலயத்திற்கு பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிபுணர் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெறக் கூடுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான போராட்டங்களின் போது தமது பணியாளர்களது பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தி இருந்தன.
இதன்படி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்புக் காரியாலயத்திற்கு பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
காரியாலத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக மேலதிகமாக காவல்துறையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*****************
உயிர்த் தியாகம் போதும்.
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பான .நா.வின் அறிக்கை வெளி வந்துள்ள வேளையில் ஸ்ரீலங்காஅரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் உள்ள சீகம்பட்டி கிராமத்தில் இளம் பொறியியலாளரான கிருஷ்ண மூர்த்தி என்ற இளைஞர் தனக்குத் தானே தீ மூட்டி தீக்குளித்துள்ளார்.
அவரது உணர்வு பூர்வமான இத்தியாக நிகழ்வானது எம்மை அதிர்ச்சிக்கும், ஆறாத் துயருக்கும் ஆளாக்கி உள்ளது என கனேடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
விலை மதிப்பற்ற உயிரை அவர் தியாகம் செய்துள்ளமை எம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
அவரது இன உணர்வினை நாம் மெச்சும் அதேவேளையில் இது போன்று தமிழ் நாட்டில் இன்னுமொரு உயிர்ப்பலி ஏற்படக் கூடாது. இதுவே இறுதி உயிர்ப்பலியாக இருக்கட்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டும், இந்தியா ஸ்ரீலங்காவுக்கு உதவக் கூடாது இவற்றைக் கண்டிப்பதற்காகவே நான் தீக்குளிக்கிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு அவர் தீக்குளித் துள்ளார்.
இத்தகைய இன உணர்வுள்ள இளந்தலைமுறையினர், தமிழ் மக்களின் இதயத்தை ஈட்டிபோல் தைக்கும் இன்னுயிர் தியாகத்தைக் கைவிட்டு தமிழினத்தின் நலனுக்காகப் பாடுபடும் அரசியல் கட்சிகளில் இணைந்து அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமது பணிவான வேண்டுகோளாகும் என கனடாவிலுள்ள தமிழர் பேரவையின் பேச்சாளரான டேவிட் பூபாலபிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
******************