Saturday 2 April 2011

செய்திகள் 02/04


சமாதானத்தை நிராகிரிக்கும் சிங்கள பேரினவாதம்


வடபகுதியில் உள்ள சகல அதியுயர் பாதுகாப்பு வலயங்களையும் நீக்கி, வட மாகாணத்திற்கு காவற்துறை அதிகாரங்களை வழங்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார் என திவயின தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது, இந்த யோசனைகளை முன்வைக்க இருந்தது.

வடபகுதிக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அரசாங்கத்தின் எந்த ஒரு அரசியல்வாதிக்கும், பலாலி விமான நிலையம் ஊடக யாழ்ப்பானத்திற்கு செல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என பாதுகாப்பு அதிகாரிகள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்திற்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால், இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்வாதிகளுக்கு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் செல்ல, அந்த மாநில காவற்துறையினர் அனுமதிக்கவில்லை எனவும் திவயின கூறியுள்ளது.

திவயின போன்ற சிங்கள பத்திரிகைகள், சிங்கள மக்களை தவறாக வழிநடத்தி வருவதாக நடுநிலையான அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் மாநிலங்களுக்கு சட்டங்களை இயற்றும் அதிகாரமும் உள்ளது.

இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்திற்கு சென்ற பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்வாதிகளுக்கு விமான நிலையத்தில் இருந்து மாநிலத்திற்குள் செல்ல அனுமதியளிக்கப்படவில்லை என திவயின கூறியுள்ளது.

பாரதீய ஜனதா கட்சி காஷ்மீரில் இந்திய தேசியக் கொடியை ஏற்ற போவதாக கூறி, போராட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. இதனடிப்படையில், அந்த கட்சியின் தலைவர்கள் அங்கு சென்று தேசிய கொடியை ஏற்ற முயற்சித்தனர்.
இவர்களின் இந்த நடவடிக்கையால் மாநிலத்தில் மேலும் பதற்றம் அதிகரிக்கலாம் என்ற காரணத்தில் இந்திய அரசாங்கம், பாரதீய ஜனதா கட்சியை மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்பதே உண்மையான காரணம் என்பதை இச் செய்தியை எழுதியுள்ள, திவயினவின் பாதுகாப்புச் செய்தியாளர் கீர்த்தி வர்ணகுலசூரிய சுட்டிக்காட்டவில்லை.
-------------------
தமிழர் குடியிருப்புக்கள் மீதான தொடரும் தீவைப்பு


நுவரெலியா வெஸ்டடோ காட்டுப் பிரதேசத்தில் இன்று பிற்பகல் 3.30 அளவில் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பிரதேச மக்கள் மற்றும் வன இலாகா அதிகாரிகளின் முயற்சியினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமையாளர் எரந்த ஹேமவர்தன கூறினார்.

இது சில விஷமிகளினால் மேற்கொள்ளப்பட்ட தீவைப்பு சம்பவம் என அவர் சந்தேகம் வெளியிட்டார்.

தற்போது வரண்ட காலநிலை நிலவுவதால் அன்றாட தேவைகளுக்காக தீயினை பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், அநாவசியமாக காட்டுப் பகுதிகளுக்கு தீ வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, மஸ்கெலியா கவரவில பாக்ரோ 200 ஏக்கர் டிவிசனில் இன்று முற்பகல் தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரதேச மக்களும், காவல்துறையினரும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ பரவல் காரணமாக ஒரு லயன் குடியிருப்பை சேர்ந்த 22 வீடுகள் முற்றாக தீக்கிரையானதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்னொழுக்கே இந்த தீப்பரவலுக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் லங்கம் தோட்டத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 20 குடும்பங்கள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் வாழும் குறித்த லயன் அறைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் அடிக்கடி மின்சார இணைப்புகள் பழுதடைந்து தீப்பரவல் சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
---------------


அப்பாவிகளைத் தடுத்து வைத்து பழிவாங்கும் அரசு


பயங்கரவாதத்தின் மாயைகளை உருவாக்கி பெரும்பான்மை சமூகத்தையும் சர்வதேசத்தையும் அரசாங்கம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற அதேவேளை, அரசியல் கைதிகளான அப்பாவித் தமிழர்களைர் பழி வாங்கிக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்திடம் உண்மையானதொரு நல்லெண்ணம் இருக்குமானால் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்ற இன்றைய சூழலிலாவது சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

அத்துடன் பிரயோசனமே இல்லாத அவசர காலச் சட்டத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்றும் கூட்டமைப்பு கோக்கை விடுத்துள்ளது.

வரவிருக்கின்ற சித்திரைப் புத்தாண்டிலாவது தம்மை விடுதலை செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகள் பாதுகாப்பு அமைச்சிடம் கோக்கை விடுத்திருந்தனர்.

இது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் இதனைத் தெவித்தார்.
--------------------


ஊடகவியலாளர்களை பாதுகாக்குமாறு கோரிக்கை


ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான காவல்துறை விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்றும் லங்கா ஈ நியூஸ் செய்தி ஆசிரியருக்கு நீதிமன்றமே பாதுகாப்பு வழங்கி நீதிவழங்க வேண்டும் என்று ஐந்து ஊடக இயக்கங்கள் தெரிவித்துள்ளன.

ஊடகவியலாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள போரை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அரசாங்கம் வாய்ப் பேச்சில் கூறாது ஊடகவியலாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்றும் அவ்வியக்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை இதழியல் கல்லூயில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த உழைக்கும் பத்திகையாளர் சங்கத்தின் பிரதி தலைவர் ஞான சிறி கொத்திக்கொட கூறுகையில்,
ஊடகவிலயாளர்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல்கள் நடத்தப்படுவதோடு பழி வாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கவும்படுகின்றனர்.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை. ஊடக சுதந்திரம் நாட்டில் உள்ளதாக அரசுத் தலைவர் கூறுகின்ற போதிலும் செய்தியை எழுதிவிட்டு சுதந்திரமாக நடமாட முடியாத நிலையே காணப்படுகின்றது.

ஊடகவியலாளர் ஒருவரை கைது செய்யும் போது அரசுத் தலைவருக்கு அறிவிக்கும்படி காவல்துறையினர் அறிவித்திருந்த போதிலும் லங்கா ஈ நியூஸ் செய்தியாளர் கைது செய்யப்பட்ட போது ஏன் அரசுத் தலைவருக்கு காவல்துறையினர் அறிவிக்கவில்லை.

எனவே, திட்டமிடப்பட்டே லங்கா ஈ நியூஸ் இணையதளம் தொடர்ந்தும் தாக்கப்படுகின்றது.

காவல்துறையினரும் அரசாங்கம் ஊடகவியலாளர்களின் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

லங்கா ஈ நியூஸ் செய்தி ஆசிரியர் கைது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மீது தமக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அரசாங்கம் விசாரணைகளின் nளிப்படை தன்மையை பாதுகாக்க வேண்டும் எனக் கூறினார்.
--------------------

மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறை

இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது இடம்பெறுவதாகக் கூறப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஐ.நா. தலையிட வேண்டுமென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதமொன்றை இன்றுகையளித்தது.

ஐ.நாவை தலையிடக் கோரவும் மாணவர்கள் மீதான தொந்தரவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இக்கடிதத்தை கையளித்ததாக ஒன்றியத்தின் தலைவர் சஞ்சீவ பண்டார தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் உயர்கல்வித்துறை அதிகாரிகளாலும் அரசாங்கத்தினாலும் தொந்தரவுக்குள்ளாக்கப்படுவதாக அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொய்யான குற்றச்சாட்டு காரணமாக சுமார் 300 மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
-----------------------

பேரினவாத முற்றுகை;கு அஞ்சும் ஐநா


கொழும்பிலுள்ள ஐ.நாவின் பணியகம் முற்றுகையிடப்பட்டால் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து அதன் அதிகாரிகள் ஒத்திகை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அதன் அறிக்கையை எந்தநேரத்திலும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கையளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதும் கொழும்பிலுள்ள ஐ.நா பணியகத்தை, சிறிலங்கா அரசாங்கத்தின் பின்புலத்துடன் சிங்களத் தேசியவாத சக்திகள் முற்றுகையிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த நிபுணர்கள் குழுவை ஐ.நா பொதுச்செயலர் அமைத்த போது, அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் சிங்களத் தேசியவாதிகள் கொழும்பிலிருந்த ஐ.நா பணியகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியிருந்தனர்.

ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கை சிறிலங்கா அரசுக்குப் பாதகமாக அமையும் என்று எதிர்பார்ப்பு நிலவதால், கொழும்பிலுள்ள ஐ.நா பணியகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஒத்திகையை ஐ.நா அதிகாரிகள் மேற்கொண்டதாகக் கருதப்படுகிறது.
-----------------------