Wednesday 21 September 2011

செய்திகள் 21/09


வன்னிக்கு பயணிக்கும் அமெரிக்க தூதுவர்
வன்னியின் இன்றைய நிலவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பியுட்டனிஸ் இன்று அங்கு பயணமொன்றை மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின் போது அரச அதிகாரிகளை மட்டுமன்றி பொதுமக்களையும் அமைப்புகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிய வருகிறது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வன்னிக்குப் பொறுப்பான கட்டளைத் தளபதி ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனையும் அவர் கிளிநொச்சியில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் பிளக்கின் கொழும்பு மற்றும் யாழ். விஜயத்தையடுத்தே இன்று அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பியுட்டனிஸ் வன்னி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
********************

தொடரும் இனவழிப்பு - முறையிடுவது யாரிடம்?
இலங்கை அரசின் திட்டமிட்ட இன ஒழிப்பு நடவடிக்கை, நில அபகரிப்பு என்பன தொடர்பாக சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதையும் செய்யத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழினம் என்றொன்று இலங்கைத் தீவில் இருக்கக்கூடாது என்ற முனைப்புடனேயே இலங்கை அரசு திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயகப் பிரதேசங்களில் அரங்கேற்றி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முல்லைத்தீவு கொக்கிளாய்ப் பகுதியில் நேற்று புதிதாக சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன.
இந்தக் குடும்பங்களுக்கு புதிதாகக் காணிகளும் வழங்கப்பட்டன.
இலங்கைத் தீவில் யார் வேண்டுமானாலும் எங்கும் வாழலாம் என இலங்கை அரசு அறிவித்து ஒருசில நாட்கள் மாத்திரமே கடந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான சிங்களக் குடியேற்றங்கள் இன்று முல்லைத்தீவு வரை படர்ந்து சென்றுள்ளன.
இது ஒரு திட்டமிட்ட இன ஒழிப்பு நடவடிக்கை என தமிழ்த் தலைமைகள் விசனம் தெரிவித்துள்ளன.
முல்லைத்தீவு, கொக்கிளாய்ப் பகுதியில் சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டது தொடர்பாகக் கருத்து வெளியிடும்போதே சுரேஷ் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
தெற்கிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வந்த சிங்களக் குடும்பங்கள் அன்று கடலோரக் கிராமங்களின் தற்காலிகமாகத் தொழில் நிமித்தம் குடியேறின.
எனவே, இவர்களை அடிப்படையாகக் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே சிங்களவர் இருந்ததாகக் கூறி இலங்கை அரசு தமிழ் நிலங்களை அபகரிக்க முயற்சிக்கின்றது.
அநுராதபுர மாவட்டத்தின் சில பகுதிகளையும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதி களையும் இணைத்து வெலிஓயா பிரதேச செயலகமொன்றை இலங்கை அரசு திட்டமிட்டு நிறுவியுள்ளது.
தனித் தமிழ் மாவட்டங்களை சிங்கள கலப்பு மாவட்டங்களாக மாற்றும் அரசின் வியூகங்களுள் இதுவும் ஒன்றுதான்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியினுள் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.
இப்பொழுது இலங்கைத் தீவில் தமிழினம் என்ற ஒன்று இருக்கக்கூடாது என்ற முனைப்புடனேயே இலங்கை அரசு செயற்படுகின்றது.
அதன் செயற்பாடுகளும் இதனை நிரூபிக்கின்றன.
இதன் ஓர் அங்கமே தமிழர் பிரதேசங்களில் அரங்கேற்றப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமாகும்.
இலங்கை அரசின் திட்டமிட்ட இன ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாம் சர்வதேசத்திடம் முறையிடுவோம்.
ஏனென்றால், இன ஒழிப்பு நடவடிக்கைகள் கூடாது என்றே ஐ.நா. சாசனத்திலும் உள்ளது என்பதைப் புரிந்து இங்குள்ளவர்கள் செயற்பட வேண்டும்.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தமிழர் தாயகப் பிரதேசங்கள் இன்று எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் கூடி ஆராய்ந்து உறுதியான சில முடிவுகளை முன்னெடுக்கவுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியதொரு நிலை ஏற்பட்டால் அதனையும் செய்ய நாம் தயாராகவே உள்ளோம்.
அரசின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கவுள்ள சில முக்கிய விடயங்களைப் பின்னர் அறிவிப்போம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
********************

தமிழ்த் தேசியக் சுட்டமைப்பை அழைக்கிறது கனடா
கனேடிய வெளிவிவகார அமைச்சின் தென்னாசியப் பிரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கனடாவிற்கு உத்தியோகபூர்வமாக அழைத்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகிறது.
இதேவேளை, கனடியத் தமிழ் கொன்சவேட்டிவ் ஆதரவாளர்கள் கனடாவின் ஆளும் கட்சியான கொன்ச வேட்டிவ் கட்சியிடம் இலங்கை விவகாரம் தொடர்பான கனடாவின் தெளிவான கொள்கை மற்றும் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு விடுத்த வேண்டுகோள்கள் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அநேகமாக கனடியப் பிரதமர் அலுவலகம் அல்லது வெளிவிவகார அமைச்சு இலங்கை விவகாரம் தொடர்பான கனேடிய அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் அறிக்கையொன்றை அடுத்தடுத்த வாரங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் கனேடிய வெளிவிவகார அமைச்சின் தென்னாசியப் பிரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கனடாவிற்கு உத்தியோகபூர்வமாக அழைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள இவ்வேளையில் அவர்கள் கனடாவிற்கு வருவதற்கு முன்பாகவே இவ்வறிவிப்பு விடுக்கப்படுமெனவும் தெரிய வருகிறது.
********************

நம்புங்கள் தீர்வு கடைக்கும் இல்லையேல் போராடுவோம் என்கிறார் மாவை
அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுக்களின் மூலம் இந்த வருட இறுதிக்குள் நல்ல தீர;வுகிடைக்கும் என்று நம்புவதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தவறினால் ஜனநாயக ரீதியாக மக்களை அணி திரட்டி அடுத்த கட்ட நகர;வை மேற்கொள்ளத் தயங்கமாட்டோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கூறினார;.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட அரசியல் பணிமனை, பாண்டிருப்பு நற்பிட்டிமுனை பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
இந்தப் பணிமனை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர; இதனைக் கூறினார;.
முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர; டொக்டர; வில்லியம் தோமஸ் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர; மாவை சேனாதிராசா தொடர;ந்து உரையாற்றுகையில் அரசுடன் மீண்டும் பேச்சு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா போன்ற சர;வதேச அழுத்தங்கள் இதற்கு இருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைத் தீர;பு பற்றிப் பேச வேண்டும் என்ற அழுத்தங்களும் அரசுக்கு விடுக்கப்பட்டன.

இதற்கும் போர; குற்றங்களுக்கும் சம்பந்தம் இருந்தாலும் அதனை சம்பந்தப்படுத்தாமல் சந்தர;ப்பத்தை விடாமல், மீண்டும் ஒரு சந்தர;ப்பம் கிடைப்பதை கைவிட்டு விடாமல், சந்தர;ப்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்தார்.
அடிப்படைக் கோட்பாடுகளிலோ, கொள்கைகளிலோ எந்தவித விட்டுக்கொடுப்புகளும் இல்லாத நிலையில் எமக்கு அரசியல் தீர;வை நிறைவு செய்வதற்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசு கூட்டமைப்பு பேச்சு மூலம் இந்த வருட இறுதிக்குள் நல்ல தீர;வு கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறு இந்த ஆண்டு முடிவதற்குள் அரசின் பதில்சரியாகக் கிடைக்காவிட்டால் சர;வதேச அரங்கிலும், எமதுமக்கள் மத்தியிலும் கருத்துக்களை முன்வைத்து மக்களை ஜனநாயக ரீதியாக அணி திரட்டி அடுத்த கட்ட நடவடிக்கையில் இயங்கத் தயங்கமாட்டோம் என்று கூறிய அவர், இவ்வாறான சந்தர;ப்பத்தில் நம் இளைஞர; சமுதாயம் மிகவும் கட்டுப்பாட்டுடன் தம்முடன் அணி திரள வேண்டும் என கோருவதாக தெரிவித்துள்ளார்.
********************

கிளிங்ரனை சந்தித்த மகிந்த
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்ரனைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
கிளின்ரன் நிலையத்தின் வருடாந்தக் கூட்டத்தின் போதே பில் கிளின்ரனை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று சந்தித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா அதிபர் மிகப்பெரிய பட்டாளத்துடன் நியுயோர்க் சென்று பணத்தை வீணடிப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று விமர்சித்துள்ளது.
மகிந்த ராஜபக்சவுடன் 116 பேர் நியுயோர்க் சென்றுள்ளனர்.
இவர்கள் தங்குவதற்கு நியுயோர்க்கின் றிட்ஸ் கார்டன் விடுதியிலும், ஹெம்லி காக்லின் விடுதியிலும் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஐ.நா தலைமையகம் அருகே விடுதிகள் இருந்தும் தொலைவில் உள்ள இந்த விடுதிகளில் தங்குவதால் அதிகளவு போக்குவரத்துச் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மணித்தியாலம் ஒன்றுக்கு 45 டொலர்படி, 90 சொகுசு வாகனங்கள் சிறிலங்கா அதிபரின் குழுவினரின் பயணத்துக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும், அவற்றின் ஓட்டுனர்களுக்கு மணித்தியாலம் ஒன்றுக்கு 12 டொலர் ஊதியம் வழங்கப்படுவதாகவும் கொழும்பு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
நாளொன்றுக்கு இந்த வாகனங்கள் 12 மணி நேரம் பயன்படுத்தப்படுவதாகவம், இதன் மூலம் வாகனங்களுக்கு மட்டும் நாளொன்றுக்கு 68 இலட்சம் ரூபா வரை செலவிடப்படுவதாகவும் அந்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜப்பானிய அரசதலைவருக்காக நியுயோர்க்கில் 8 வாகனங்கள் மாத்திரமே வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
********************

சித்தம் கலங்கி சீறிப்பாயும் கோத்தாபாய
சிறிலங்காவைக் குறிவைத்து அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக் குழுவை அமைக்கும் நோக்கில், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பல்வேறு பொய்களும் அவிழ்த்து விடப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், போரின் கடைசி 5 மாதங்களில் வன்னியில் ஒரு இலட்சம் பேர் மரணமானதாக பிரித்தானிய நாடாளுமன்ற விவாதத்தில் கூறப்பட்டுள்ளதாவும், இந்த விபரங்கள் அவர்களுக்கு எப்படித் தெரியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் கவனத்தை ஈர்ப்பதற்காக முட்டாள்தனமான முறையில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மிகைப்படுத்திய தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நியுயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்துக்கு முன்பாக சிறிலங்காகவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பரப்புரைப் போரின் ஒரு பகுதியே இது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தொழிலாளர் கட்சியின் மிச்சம் மற்றும் மோடென் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சியொபெய்ன் மக்டொனா, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் சிறிலங்காவில் போரின் கடைசி 5 மாதங்களில் 1 இலட்சம் பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 40ஆயிரம் பேர் பொதுமக்கள் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் உண்மையை அறிந்திருக்கவில்லை என நம்பியிருந்த ஸ்ரீலங்கா உண்மையான தகவல்கள் தற்போது வெளியாவதை கண்டு சித்தம் கலங்கிப் போயிருப்பதாலாயே இத்தகைய கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவதானி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
********************

தமிழரின் பொருளாதாரத்தை இலக்கு வைக்கும் சிங்களம்
பயங்கரவாத சந்தேக நபர்களின் சொத்துக்களை முடக்குவது தொடர்பில் புதிய சட்ட மூலங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்த உடனேயே அவர்களது சொத்துக்களை முடக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தச் சட்டத் திருத்தம் இன்று பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சந்தேக நபர்களின் பணம், வங்கிக் கணக்கு மற்றும் ஏனைய சொத்துக்களை விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே முடக்கி வைக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
வெளிநாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கையில் சொத்துக்களை திரட்டுவதற்கும் தடை விதிக்கப்பட உள்ளது.
சந்தேக நபர் ஒருவருக்கு நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரையில் தற்போது அவரது சொத்துக்களை முடக்க முடியாது.
வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்துவதிலும் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
********************

கால் பதிக்கும் இந்திய கடற்படை
சிறிலங்கா கடற்படையுடன் போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக வந்துள்ள இந்திய கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதிகளவிலான பாரிய போர்க்கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது
கடந்த 19ம் நாள் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தப் போர்க்கப்பல்கள், எதிர்வரும் 24ம் நாள் போர்ப்பயிற்சிகள் நிறைவடைந்த பின்னரே புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் அதிகளவிலான வெளிநாட்டுப் போர்க்ப்பல்கள் தரித்து நிற்பதை தொலைவில் இருந்தே பொதுமக்கள் பார்வையிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
********************

தடுத்து வைக்கப்பட்டோரை விடுவிக்க மனு
இலங்கையில் தொடர்ந்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களையும், அங்குள்ள கொடிய சித்திரவதை சிறைகளில் உள்ள இளைஞர்களையும் விடுவித்து அவரவர் வாழ்ந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் எனக்கோரி சென்னையில் உள்ள யுனிசெப் அமைப்பிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அடையாறில் ஐ.நா.சபையின் ஓர் அங்கமான யுனிசெப் அமைப்பில் நேற்றுக் காலை பல்வேறு தமிழ் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் ஐ.நா. பிரதிநிதிகளிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
இலங்கையில் தொடர்ந்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களையும், அங்குள்ள கொடிய சித்ரவதை சிறைகளில் உள்ள இளைஞர்களையும் விடுவித்து அவரவர் வாழ்ந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும்.
அவர்கள் அங்கு கௌரவமான வாழ்க்கையைத் தொடங்க உரிய நடவடிக்கையை ஐ.நா. எடுக்க வேண்டும்.
தமிழர் பகுதிகளில் உள்ள இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்.
தமிழர் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்களர்களை வெளியேற்ற வேண்டும்.
அங்கு நடந்த யுத்தகுற்றங்களை அந்த நாட்டு அரசே விசாரித்தால் நீதி கிடைக்காது.
சர்வதேச நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்த வேண்டும்.
சனல் 4 மற்றும் சுதந்திரமான ஊடகங்கள் வெளியிட்ட ஆதாரங்களை இந்த விசாரணைக்கு உரிய ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பலத்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இலங்கைத் தலைவரை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்.
தமிழர் பகுதிகளில் வாழும் மக்களின் கருத்துக்களை அறிவதற்கு அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெறவேண்டும் என்ற இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள தமிழர்களை இலங்கைக்கு வெளியேற்றாதபடி, ஐ.நா. சபை பார்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
********************

தூக்குத் தண்டனை யாருக்கு?
தூக்கு தண்டனையை நிறைவற்றக் கூடிய வேலையாள் தேவை என்ற விளம்பரத்தை விரைவில் வெளியிடப்போவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் 1976 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருவர் கூட தூக்கிலிடப்படவில்லை என்றாலும் மரண தண்டனை நாட்டின் சட்டத்தில் உள்ளது.
கொழும்பு வெலிக்கந்தை சிறைச் சாலையில் தான் இந்தப் பணிக்கான ஆள் கோரப்பட்டுள்ளது.
இந்தப் பணியில் இருந்தவர் சிறைக்காவலராக பதவி உயர்வு பெற்றுச் செல்வதால் சற்றே கீழ் நிலையில் இருககும் இந்தப் பணி காலியாகி உள்ளது.
உடனடியாக ஆட்களைத் தூக்கில் போடும் எண்ணம் தமக்கு இல்லை என்று இலங்கை சிறைத் துறைத் தலைவர் பி.டபிள்யு.கொடிப்பிலி தெரிவித்தார்.
ஆனால், மொத்தமாக 357 பேர் தூக்கு தண்டனை கைதிகளாக இருக்கின்றனர், எனவே தண்டனைகளை நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் முற்றாக இல்லை என்று கூறிவிட முடியாது.
அலுகோஸ் என்று சொல்லப்படும் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணியில் தற்போது இருப்பவரும் அதற்கு முன்பு அந்தப் பணியை இருந்தவரும் யாரையும் தூக்கிலிட்டதில்லை.
தற்போது தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணியாளராக இருப்பவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு தனது 22 ஆவது வயதில் இந்தப் பணிக்கு சேர்ந்தார்.
ஆனால் இவரின் பெயர் விபரம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
வறுமை காரணமாக தனது தந்தை செய்த பணியில் தான் சேர நேரிட்டதாக அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த ஒரு செவ்வியில் கூறியிருந்தார்.
மிக மோசமான குற்றங்களைச் செய்தவர்களுக்கு மரண தணடனை விதிக்கப்பட வேண்டும் என்று தான் நம்பினாலும் தனது பணிக்காலத்தில் யாரையும் தூக்கில் போடாதது தனக்கு மகிழ்சியை அளிப்பதாக அவர் கூறினார்.
எல்லோரும் தூக்குப் போடும் வேலையைச் செய்வர்கள் இதயமில்லாதவர்கள் என்று நினைக்கிறார்கள் அது தவறு என்றும் அவர் கூறியிருந்தார்.
அதே போல தனது குழந்தைகள் தம்முடையை குடும்பத் தொழிலை செய்யக் கூடாது என்று விரும்பும் அவர் தான் தனது பணிக் காலத்தில் குமாஸ்த்தா வேலைகளைச் செய்து காலத்தைக் கழித்ததாகத் தெரிவித்தார்.
மீண்டும் மரண தண்டனையைக் கொண்டு வரப் போவதாக அரசு அவ்வப்போது தெரிவித்தாலும், தூக்குதண்டனை அமுலுக்கு வரவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான்கு இளவயதினரைக் கொன்ற வழக்கில் நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிகக்கப்பட்டிருந்தது என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.
********************

நடவடிக்கை இல்லையென முறையிடும் யாழ் அரச அதிபர்
குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற அசாதாரண சூழல்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதி காவல்துறை மா அதிபருக்கும் கட்டளைத்தளபதிக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், யாழ்ப்பாணத்தில் கிறிஸ் பூதம் என்ற பதத்தைப் பாவித்து பெண்கள் மீதான சேட்டைகளும், திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பில் பொதுமக்களால் காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதும் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதில்லையென தெரிவித்ததுடன் இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்குமாறு பிரதி காவல்துறை மா அதிபருக்கு தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
********************

அதிகரிக்கும் கருக்கலைப்புக்கள்!
இலங்கையில் தினமும் 900 கருக் கலைப்புக்கள் இடம்பெறுவதாக குடும்ப சுகாதாரப் பணியகம் தெரிவித்துள்ளது.
இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் கருக்கலைப்புக்கள் வருடாந்தம் இடம்பெறுகின்றன.
வருடாந்தம் 3 இலட்சத்து 80 ஆயிரம் பிறப்புக்கள் இடம்பெறுகின்ற நிலையிலேயே கருக்கலைப்புக்களும் அதிகரித்திருப்பதாக சமூக, சுகாதார ஆலோசகர் வைத்தியர் கபில ஜெயரட்ண தெரிவித்தார்.
2005 ஆம் ஆண்டிலேயே மிகக் குறைவான 660 கருக்கலைப்புக்கள் நாளாந்தம் இடம்பெற்றிருந்ததுடன், 17 உயிர்கள் வருடாந்தம் இழக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கருக்கலைப்பில் 92 வீதமானவை திருமணமான பெண்களுடையது 8 வீதம் திருமணமாகாத பெண்களுடையது.
இடம்பெறுகின்ற கருக்கலைப்புக்களில் 27 வீதமானவை 25 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்ட பெண்களுடையது என கணக்கெடுப்பொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
********************

இலஞ்சம் கொடுத்து வாக்கு கேட்கும் வங்குரோத்து அரசியல்
கோழி குஞ்சுகளையும், சேலைகளையும் வழங்கி அரசாங்கம் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதற்கு மேலதிமாக இவ்வாறு வாக்காளர்களுக்கு வித்தியாசமான லஞ்சம் வழங்கப்படுகின்றது.
தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இலவச உணவு, இலவச பொருள் மற்றும் ஏனைய அரச சொத்து துஸ்பிரயோக நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
அரசாங்கம் சகல தேர்தல் சட்டங்களையும் மீறிச் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பில் அரசாங்க உயரதிகாரிகள் மீது ஆளும் கட்சி அரசியல்வாதிகள் அழுத்தங்களை பிரயோகிக்கின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார;.
********************