Saturday 3 September 2011

செய்திகள் 03/09


ஐநா என்ன செய்யும்?
ஐநா நிபுணர் குழு அறிக்கையை ஐநா சபையின் வேறு நிறுவனங்களுக்கு சமர்ப்பிப்பது குறித்து ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிபுணர் குழு தொடர்பிலான அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு பான் கீ மூன் தயாராகி வருவதாக அவருடைய பதில் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழு அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பான் கீ மூன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை பர்ஹான் ஹக் உறுதிப்படுத்தியுள்ளார்
**************

பொய்யுரைக்க தயாராகும் ஸ்ரீலங்கா!
சனல்-4 தொலைக்காட்சி தயாரித்து வெளியிட்ட சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்துக்குப் போட்டியாக, சிறிலங்கா அரசாங்கம் தயாரித்துள்ள ஆவணப்படமும் ஐ.நா வளாகத்தில் காண்பிக்கப்படவுள்ளது.
'டுநைள யுபசநநன ருpழn' என்ற பெயரில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தயாரித்துள்ள இந்த ஆவணப்படத்தை ஐ.நா வளாகத்தில் னுயப ர்யஅஅயசளமதழடன மண்டபத்தில் எதிர்வரும் செப்ரெம்பர் 6ம் நாள் பிற்பகல் 2 மணியளவில் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு ஐ.நா வை தளமாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிபிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்னவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளனர்.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஐ.நா வளாகத்தில் உள்ள தேவாலய நிலையத்தில் திரையிடப்பட்டிருந்தது.
அதற்குப் போட்டியாகவே சிறிலங்கா அரசும் இந்த ஆவணப்படத்தை முதல் அவென்யூவில் திரையிடவுள்ளது.
இதன்மூலம் ஐ.நா வளாகத்தை சிறிலங்கா அரசு பரப்புரைக் களமாக மாற்ற முனைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன
**************

கேள்விக்கு என்ன பதில்?
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டால் உரிய பதில்களைத் தெளிவாக வழங்கத் அரசு தயாராகவே உள்ளது என்று மாநாட்டிற்குச் செல்லும் குழுவில் பங்குபெறும் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச மட்டத்தில் இலங்கை விவகாரம் தொடர்பில் பல்வேறு நாடுகள் வௌ;வேறான கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் இலங்கைக்கு ஆதரவாக சில நாடுகளும் எதிராக பல நாடுகளும் குரல் கொடுத்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மீது சுயாதீன விசாரணை தேவை என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இந்த நிலையில் ஜெனிவாவில் எதிர்வரும் 12ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 18 ஆவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
இலங்கை விவகாரத்தில் சர்வதேசத்துக்குத் தகுந்த பதில் வழங்கப்படுமா என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிடம் வினவியபோது ஜெனிவா மாநாட்டின்போது தகுந்த பதில் வழங்கத் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
**************

தாக்கத்தின் வெளிப்பாடு உணர்த்தும் உண்மைகள்!
பொறுப்புடைமை விவகாரம் குறித்து, இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையில் நடைபெறும் பரிமாற்றங்கள் நாட்டின் கைத்தொழில்துறைக்கு கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என தனியார் துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கான நிபுணர் குழுவின் ஆலோசினை அறிக்கை தொடர்பான இலங்கை தனியார்துறையின் மதிப்பீடு எனும் அறிக்கையில் இந்த அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச சமூகத்துடனான அரசாங்கத்தின் இடைவினைகளானவை, சிறு வர்த்தகர்கள் மீது ஏற்படுத்தம் தாக்கத்தை இந்த அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இழப்பானது ஆடை தயாரிப்பு ஏற்றுமதித் துறையிலுள்ள சிறு பங்காளர்களை ஒரு மட்டத்தில் உணரப்பட்டது.
அமெரிக்கா திட்டமிட்டுள்ள பொருளாதார தடைகளும் அமுல்படுத்தப்பட்டால் அவை மக்களை பாதிக்கும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையின் தண்டிக்கும் தன்மையானது கடந்தவற்றை மீண்டும் கிளறுவதாகவே அமையும் என தனியார் துறையினரின் அறிக்கை தெரிவித்துள்ளது.
அதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையானது துல்லியம் என்ற நிலையிலிருந்து தொலைவில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்செயன்முறைக்கு சிவில் சமூகம் மற்றும் ஊடகங்களின் பங்குபற்றுலுடன் பொது தனியார் பங்குடைமையுடன் கூடிய பொறிமுறையொன்று வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வர்த்தக சம்மேளனம், இலங்கை வர்த்தக சங்கம் மற்றும் கைத்தொழில் கூட்டமைப்பு, இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம், கூட்டு ஆடைக்கைத்தொழில் ஒன்றியம் ஆகியன இந்த அறிக்கையை அங்கீகரித்துள்ளன.
**************

அடக்குமுறைக்கான அறிவிப்பு!
வடக்கில் நிறுவப்பட்டுள்ள எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது என பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.
பாதுகாப்பு நோக்கத்திற்காக வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த கோரிக்கை தொடர்பில் பாதுகாப்புச் செயலளார் கோதபாய ராஜபக்ஷ கவனம் செலுத்தி வருவதாக குறித்த சிங்களப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
**************

கிறிஸ்பூத வடிவில் தொடரும் தாக்குதல்கள்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை நேற்று இரவு இராணுவத்தினர் தாக்கினர் என்ற குற்றச்சாட்டு மாணவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறீஸ் பூத விவகாரமே இந்தத் தாக்குதலுக்கு வழிவகுத்தது என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரவு 10.30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழகப் பெண்கள் விடுதியின் மீது யாரோ விஷமிகள் கல்வீசியதை அடுத்து அவர்கள் தகவல் கொடுத்ததன் பேரில் ஆண்கள் விடுதியில் இருந்து மாணவர்கள் சிலர் பெண்கள் விடுதி இருந்த இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர்.
மாணவர்கள் அந்தப் பகுதிக்கு வந்தபோது, திடீரென இரண்டு ட்ரக்குகளில் அங்கு வந்த இராணுவத்தினர் தம்மில் இருவரைத் தாக்கினர் என்று மாணவர்கள் கூறினர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த விடுதிக் காப்பாளர், மாணவர்களை ஏன் தாக்குகிறீர்கள் என்று இராணுவத்தினரிடம் கடுமை காட்டியதும், அவர்கள் கொட்டன்களுடன் நின்றார்கள் அதனால் தாக்கினோம் என்று படையினர் பதிலளித்தனர் எனவும் கூறப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக விடுதிகளைச் சுற்றிய பகுதிகளில் இராணுவக் காவல் பலப்படுத்தப்பட்டிருந்தது.
**************

பாரமுகமான அரசும் பழிவாங்கும் படையும்!
யாழ் குடாநாட்டில் மர்ம மனிதனின் நடமாட்டம் அதிகரித்திருப்பதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இணைச்செயலர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மர்ம மனிதர்களைத் துரத்திச் சென்றபோது, அவர்கள் இராணுவ முகாம்களுக்குள் ஓடி மறைந்ததையடுத்து, இராணுவத்தினரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அதன் பின்னர், யாழ் மாவட்டத்தி;ல் மர்ம மனிதர்களின் அட்டகாசம் இடம்பெற்ற பல பகுதிகளுக்கும் சென்று மக்களின் நிலைமை மற்றும் மர்ம மனிதன் விவகாரத்தினால் ஏற்பட்டுள்ள நிலைமைகளையும் அவர் நேரில் கண்டறிந்துள்ளார்.
பொதுமக்களின் கவலைகளையும் உணர்வுகளையும் அவர் கேட்டறிந்துள்ளார்.
இந்த விஜயம் குறித்தும், மக்களின் நிலைமைகள் குறித்தும் அவர் கூறுகையில் பல கிராமங்களிலும் பதட்ட நிலைமை காணப்படுவதாகவும், அங்கு மக்கள் அச்சத்தில் உறைந்து போயிருப்பதாகவும் தெரிவித்தார்.
மக்கள் எல்லோருமே அச்சத்துடன் வாழ்கின்ற ஒரு துர்ப்பாக்கியமான நிலைமையே காணப்படுகின்றது.
பெண்கள் யாரும் வீடுகளில் இரவில் தங்குவதில்லை.
கிராமத்தவர்கள் ஒன்று கூடி ஒரே இடத்தில் இரவைக் கழிக்க வேண்டிய நிலைமையில் இருக்கின்றார்கள்.
பெண்களும் குழந்தைகளும் இவ்வாறு கிராமங்களில் ஒரே இடத்தில் இரவைக்கழிக்கும் அதேவேளை, ஆண்கள் இரவு முழுதும் கண்விழித்திருந்து காவல் புரிகின்றார்கள்.
இதனால் நித்திரையின்றி, களைத்துப் போயிருக்கும் அவர்கள் மறுநாள் பகலில் வேலைக்குச் செல்ல முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் பல குடும்பங்கள் வறுமை நி;லைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்தி;ற்கு கொண்டு வந்துள்ள போதிலும், அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இந்த விடயத்தில் பாராமுகமாக இருக்கின்ற அரசாங்கத்தின் போக்கு குறித்து சர்வதேச நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பி;ரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
**************